குமரி -காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

69பார்த்தது
குமரி -காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி நெல்லிக்காய் விளையை சேர்ந்தவர் சார்லஸ் இவரது மகள் ஆஸ்டின் ஜெமிலா( 23 ) , இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் லேப் டெக்கனீசனகாக ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (25 ) , என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மினி பஸ்சில் நடத்துனராக இருந்து வந்தார். தற்போது கொச்சின் துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மினி பஸ் நடத்துனராக இருந்தபோது ஆஸ்டின் ஜெமிலா-வுடன் காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவருக்கு வீட்டார் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இத் தகவலை அரவிந்திடம் ஆஸ்டின் ஜமீலா தெரிவித்துள்ளார். இதை அடுத்து கடந்த எட்டாம் தேதி ஊருக்கு வந்த அரவிந்த் தனது காதலியை அழைத்து சென்று மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் கொச்சினில் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை காதல் ஜோடி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதை அடுத்து ஆஸ்டின் ஜமீலா-வுடன் தாயார் மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பாசப் போராட்டம் நடத்தினார். ஆனால் ஆஸ்டின் ஜமீலா தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி கொடுத்து விட்டு காதலன் உடன் சென்றுவிட்டார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி