குமரி - இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை

58பார்த்தது
குமரி - இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை
02. 08. 2024 (வெள்ளிக்கிழமை) அ
இன்று காலை 08: 00 மணி முதல் மாஞலை 2: 00 மணி வரை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு, ஆர்வீபுரம், ஆசாரிபள்ளம், தம்மத்துகோணம், அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி