கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையில் செல்லும் பேருந்துகள் அவ்வப்போது சேதமடைந்து விபத்துக்குள்ளாகி வருவது வாடிக்கையாக உள்ளது, இந்நிலையில் இன்று மார்த்தாண்டத்திலிருந்து கலிங்கராஜபுரம் செல்லும் அரசு பேருந்து களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயந்தபடி அலறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் அவசர அவசரமாக சாலையில் பேருந்தை பிரேக் பிடித்து நிறுத்தினார். உடனடியாக கீழே இறங்கிப் பார்த்த போது தான் தெரிந்தது வெளியில் இருந்து யாரும் கால் வீசி தாக்கவோ வேறு வாகம் எதுவும் மோதவோ இல்லை ஆனால் பேருந்தின் கண்ணாடி தானாக வெடித்து சிதறியது தெரிய வந்தது. இதனால் சாலையில் இரு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுமக்கள் வேடிக்கை பார்க்க தொடங்கினர். இதனால் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பயணிகளை அவ்விடத்தில் இறக்கிவிட்டு படந்தாலுமூட்டில் உள்ள குழித்துறை பணிமனைக்கு பேருந்தை இயக்கி சென்றுவிட்டார். இதனால் அங்கே இறக்கி விடப்பட்ட பயணிகள் வேறு பேருந்துகளில் ஏறி சென்றனர். பலர் டெப்போ-வுக்கு கொண்டு சென்ற பேருந்தில் அமர்ந்திருந்தனர். இதில் பேருந்தின் முன் பக்கத்தில் இருந்த மூன்று பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.