கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் - வட்டவிளை சாலையில் கனமழை காரணமாக காய்ந்த மரம் ஒன்று தன் மீது படர்ந்து வளர்ந்திருந்த செடி கொடிகளுடன் வேருடன் சாலையில் சாய்ந்தது. இதனால் இந்த வட்டவிளை சாலையில் பொதுமக்கள் நடந்தும் வாகனங்களிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இம்மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.