களியல்: கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு

61பார்த்தது
களியல்: கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு
களியல் அருகே உள்ள தெங்கன்புதூர் விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (67). தொழிலாளி. இவர் நேற்று மதியம் அந்தப் பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அருமனையிலிருந்து களியல் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென மின்கம்பத்தில் மோதி செல்வராஜை இடித்து தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த கடையாலுமூடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி வந்தவர் ஆம்பாடி பகுதியை சேர்ந்த ரதிஷ் என்பது தெரியவந்தது. காரில் இருந்த ரதீஷின் மனைவி இரண்டு குழந்தைகள் காயம் அடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி