களியக்காவிளை: பஸ் நிலையம் அடிக்கல் நாட்டு விழா

53பார்த்தது
களியக்காவிளை: பஸ் நிலையம் அடிக்கல் நாட்டு விழா
களியக்காவிளை தேர்வு நிலை பேருராட்சியின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நாகர்கோவிலில் வைத்து காணொளி காட்சி மூலம் தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார். 

களியக்காவிளையில் நடந்த நிகழ்ச்சியில் தலைவர் சுரேஷ், செயல் அலுவலர் சந்திரகலா, பேருராட்சிகளின் உதவி இயக்குநர் ராமலிங்கம், மற்றும் பேருராட்சி துணைத் தலைவர் பென்னட்ராஜ், உறுப்பினர்கள் ரிபாய், குணசீலன், நிஷாலிஷ்சம், உமா மகேஸ்வரி, சுனிதா, ஜெயகலா, வின்சென்ட், சுசீலா விஜயகுமாரி, டெல்பின் ஜெமிலா, தாஸ், மற்றும் பஞ்சு, பணியாளர்கள் மேல்புறம் ஒன்றிய தி.மு.க முன்னாள் அவைத்தலைவர் மாகீன் அபுபக்கர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி