இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயன் (44) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜாசிங் (32) திருமணமாகவில்லை. இருவரும் நண்பர்கள்.
முன்விரோதம் காரணமாக கடந்த 14-ம் தேதி இரவு சுமார் பத்து மணியளவில் ஜெயனை அங்கு வந்த ராஜாசிங் அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் ஜெயன் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் போட்டவுடன் ராஜசேகர் தப்பிவிட்டார்.
தொடர்ந்து இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜா சிங்கை கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று (17-ம் தேதி) இரவு முதல் ராஜாசிங் ஜெயனை வெட்டிக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.