அறிவியல் கல்லூரியில் புதிய செயலாளர் பதவியேற்பு

73பார்த்தது
அறிவியல் கல்லூரியில் புதிய செயலாளர் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்களால் புதிய செயலர் அருட்தந்தை முனைவர் ஸ்டீபன், பொருளாளராக அருட்தந்தை வின்ஸோ ஆண்டனி ஆகியோரும் பதவியேற்று கொண்டனர். கடந்த ஆறு ஆண்டுகளாக கல்லூரி செயலராக பணியாற்றிய முனைவர் அருட்தந்தை எக்கர்மென்ஸ் மைக்கேல் துண்டத்துவிளை பங்கின் பங்கு தந்தையாகவும், குழித்துறை மறை மாவட்ட குரு மாணவர்களின் அதிபராகவும் ஆயர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக பதவி ஏற்று கொண்ட அருட்தந்தையர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்,

தொடர்புடைய செய்தி