கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மமூட்டுக்கடை ஆர்பிஏ சென்ட்ரல் பள்ளியில் சிகப்பு நிறம் மற்றும் பழங்கள் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது, பள்ளி முதல்வர் ஷீலா குமாரி அனைவரையும் வரவேற்றார். பள்ளி தாளாளர் கலாசன்ஸ் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் இணைத்தாளாளர் பிரான்சிஸ், நிர்வாக குழு தலைவர் நவீன் வில்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மழலையர் பிரிவு மாணவர்கள் சிவப்பு உடைகள் அணிந்து , பழங்கள் வடிவில் ஆடைகள் அணிந்து சிறப்பித்தனர். மாணவர்கள் பாடல்கள், நடனம் , நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆசிரியர் வினி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.