ஹோட்டலில் காலாவதியான உணவு பறிமுதல்

4691பார்த்தது
ஹோட்டலில் காலாவதியான உணவு பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி அதிகாரிகள் மார்த்தாண்டம் பகுதியில் திடீர் சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில தினம் முன்பு 4 டன்னுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் கவர் மற்றும் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. சோதனையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால் மார்த்தாண்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவு குறைந்துள்ளது. கவர்களை பயன்படுத்தும் தனி நபருக்கும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (22.02.2024) குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமத்திலகம் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் திடீரென்று புகாரின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

ஆய்வில் காலாவதியான சிக்கன் உள்ளிட்ட உணவு பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது ஹோட்டலுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி