குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பு குடியிருப்புகள் நிறைந்த பகுதியின் மத்தியில் அரசு டாஸ்மாக் கடை மற்றும் மது பார் செயல்பட்டு வருகிறது இந்த கடை அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே மும்மத வழிபாட்டு தலங்கள் மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவைகளும் செயல்பட்டு வருகின்றன இதனால் இந்த பகுதியில் எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது இதனால் இந்த கடையை அங்கிருந்துஇடமாற்றம் செய்ய வேண்டும் என கேட்டு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரச்சனைக்குரிய மதுக்கடை முன்பு மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் உட்பட எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் அரசு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராகவும் பாடல்பாடி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் இந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.