கன்னியாகுமாரி மாவட்டம்
திருவட்டாறு பாரதப் பள்ளியை சேர்ந்தவர் உஷாகுமாரி. இவர் திருவட்டாறு பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர். இவரது கணவர் ஜாக்சனை நேற்று இரவு, முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் உட்பட சிலர் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் நெய்யாற்றின்கரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜாக்சன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, திருவட்டாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.