கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களை இன்று சந்தித்தார், அப்போது அவர் தெரிவித்ததாவது: விஜய தரணி எம். எல். ஏ பாஜகவில் இணைய போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது , இன்று அவர் பாஜக-வில் இணைந்துள்ளார். இது விளவங்கோடு தொகுதி மக்களுக்கு அவர் செய்த மிக பெரிய துரோகம் விளவங்கோடு தொகுதி மக்கள் அவரை மூன்று முறை எம். எல். ஏ-வாக தேர்ந்தெடுத்து அழகு பார்த்தார்கள் , இந்த தொகுதி மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல பெரிய துரோகம் செய்துள்ளார், பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி முன்னுரிமை வழங்கவில்லை என அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்று முறை விளங்கோடு சட்டமன்ற தொகுதியில் அவருக்கு வாய்ப்பளித்தது காங்கிரஸ் கட்சி தான், சட்டமன்றத்தில் கட்சி கொறடாவாகவும் நியமித்தது. இது ஒரு பொய் சாக்கு, அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கலாம், இது கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்கும், இது காங்கிரஸ் கட்சிக்கும் விளவங்கோடு தொகுதி மக்களுக்கும் செய்த துரோகம், என் மீது வளர்ச்சி பணிகள் செய்ய வில்லை என குற்றச்சாட்டுகளை பொருத்தமட்டில் இவர் தொகுதிக்கு வராத எம்எல்ஏ -வாகவே இருந்தார். இது மக்கள் அனைவருக்கும் தெரியும், விளவங்கோடு தொகுதி மக்களும் அவர் மீது அதிருப்தியில் தான் இருந்தனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.