கப்பல் போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தினை கலெக்டர் ஆய்வு

69பார்த்தது
கப்பல் போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தினை கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என். ஸ்ரீதர்  கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகம் மற்றும் வளாகங்களை இன்று (8- 06-2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் - 

கன்னியாகுமரியில்  அமைந்துள்ள  பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் தினமும் கால நிலைக்கு ஏற்ப விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து சென்று வருகிறது. படகுகள் பராமரிக்கப்படும்  விதம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. பழுதடைந்த அலுவலக கட்டிடங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.   இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி