செங்கவிளை:  ரேஷன் கடை.. காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை

57பார்த்தது
செங்கவிளை:  ரேஷன் கடை.. காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட அடைக்கா குழி கிராமத்தில் சங்குருட்டி ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்குள்ள 30  குடும்ப அட்டைகளை வட்ட வழங்கல் துறை ரத்து செய்து என் பி ஹெச் ஹெச் ஆக மாற்றியது. இதில் நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைம்பெண்கள், தொழு நோயாளிகள், கணவரால் கைவிடப்பட்டுள்ளவர்  என பலர் அடங்குவர். பாதிக்கப்பட்டவர் பலர் உயர் அலுவலர்களை சந்தித்து மனு கொடுத்தும் விசாரணையில் இல்லை. பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  மீண்டும் ஏ ஓய் ஒய் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டும், செங்கவிளை  ரேஷன் கடையில் உள்ள காலி சாக்குகளை அகற்றக் கேடும் தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனையாக தலைவர் சுரேஷ் ராஜனிடம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ரெஜி கோரிக்கை மனு கொடுத்தார்.

தொடர்புடைய செய்தி