கார் மோதி விபத்து -வாலிபரின் கால் முறிந்தது

58பார்த்தது
கார் மோதி விபத்து -வாலிபரின் கால் முறிந்தது
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் இவரது மகன் மாணிக்கம்( 25) , இவர் இன்று தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை அடுத்து திருத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மார்த்தாண்டம் - வள்ளவிளை அரசு பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. இதனால் மாணிக்கம் இருசக்கர வாகனத்தை மெதுவாக ஓட்டியபடி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்பக்கத்தில் இருந்து திருநெல்வேலி பதிவுவெண் கொண்ட சொகுசு கார் மாணிக்கத்தின் மீது அதிவேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் மோதியுள்ளது. இதனால் மாணிக்கத்தின் இருசக்கர வாகனம் அரசு பேருந்து பின்பக்கத்தில் மோதி, பேருந்தின் பின்பக்க தகடு உடைந்து இருசக்கர வாகனம் உள்ளே நுழைந்தது, இதழ் மாணிக்கம் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் மாணிக்கத்தின் கால் முறிந்தது, மேலும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதேபோல விபத்து ஏற்படுத்திய சொகுசு காரின் முன் பக்கம். அப்பளம் போல் உடைந்தது. மேலும் அதில் இருந்த நபருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி