குமரி மலையோரப் பகுதியான ஆறுகாணியிலிருந்து மாா்த்தாண்டத்துக்கு 15 பயணிகளுடன் நேற்று (28-ம் தேதி) பிற்பகல் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இடைக்கோடு பகுதியைச் சோ்ந்த ராஜன் (51), பேருந்தை ஓட்டிச் சென்றாா்.
பஸ் கேரள மாநிலப் பகுதியான ஆனைப்பாறை என்ற இடத்தில் சென்றபோது, ஓட்டுநருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால், அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக், காா் ஆகியவற்றின் மீது மோதி நின்றது. இதில், யாரும் காயமடையவில்லை. இதையடுத்து, டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இதுதொடா்பாக வெள்ளறடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.