விவசாயி மீது தாக்குதல் - 9-பேர் பேர் மீது வழக்கு

83பார்த்தது
விவசாயி மீது தாக்குதல் - 9-பேர் பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளியாடி ஏரியன்விளையை சேர்ந்தவர் ஆபிரகாம்(57), விவசாயி அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிஜோ (23) , என்பவருக்கும் மோட்டார் சைக்கிளை சத்தமாக சவுண்டு எழுப்பியதை தட்டி கேட்டதை அடுத்து இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந் நிலையில் சிஜோ, செல்மோன் , டினோ மேலும் கண்டால் தெரியும் ஆறு பேர் சேர்ந்து ஆபிரகாமை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஆபிரகாம் அலறியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். இதை பார்த்த அந்த கும்பல் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். ஆரகாமை அங்கிருந்த மீட்டு குழிதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி