கன்னியாகுமரி மாவட்டம்
குழித்துறை நகராட்சிக்குட்பட்ட திருத்துவபுரம் முதல் உண்டானகுழி வரை உள்ள செல்லும் ரோடு புதிய பைப் லைன் போடுவதற்கு தோண்டப்பட்டதால் ரோடு படுமோசமான நிலைமை அடைந்தது வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இந்த ரோடு சீரமைக்க நகராட்சி பொது நிதியில் ரூபாய் 48 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இதேபோல் வெட்டுவெந்நியில் ஒய்எம்சிய பின்புறம் உள்ள துரம்பல் ரோடு தார் போடுவதாக ரூபாய் 17 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இதற்கான பணியை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி இன்று துவக்கி வைத்தார். இன்ஜினியர் குரல் செல்வி, கவுன்சிலர்கள் ஜெயந்தி, ரோஸ்லெட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.