மனைவியுடன் தகராறு தொழிலாளி தற்கொலை

61பார்த்தது
மனைவியுடன் தகராறு தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திற்பரப்பு அருகே தம்புரத்தான்வீடு பகுதி சார்ந்தவர் செல்வராஜ் கூலி தொழிலாளர் இவரது மனைவி ஓமனா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் இளைய மகனுடன் வசித்து வருகின்றனர். மது அருந்தும் பழக்கம் உள்ள செல்வராஜ் தொடர்ந்து மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் திட்டியதால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த போது இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நேற்று குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி