திருவட்டார்: கால்வாயில் தண்ணீர் திறப்பு

2பார்த்தது
திருவட்டார்: கால்வாயில் தண்ணீர் திறப்பு
திருவட்டாறு வட்டாரம் சுருளக்கோடு ஊராட்சி உள்ளிமலை பகுதியில் நடைபெற்று வந்த அனந்தனார் கால்வாய் நிரந்தர சீரமைப்பு பணி இன்று (ஜூலை 5) முடிவடைந்து விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த பணியானது ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. தண்ணீர் திறக்கப்பட்டதால் அந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த செப்பனிடும் பணி முழுமை பெறுவதற்காக ஆலோசனைகள் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி