திருவட்டார்: ஜவுளி கடையில் தீ விபத்து;  பொருட்கள் எரிந்தது

76பார்த்தது
திருவட்டார் அருகே உள்ள புலிப்பனம் பகுதியில் தனியார் வர்த்தகம் நிறுவன செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜவுளி, மளிகை பொருட்கள், பரிசு பொருட்கள், பர்னிச்சர் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு வர்த்தகம்  முடிந்ததும்  கடையை பூட்டி விட்டு பணியாளர்கள் சென்றனர்.

      இன்று காலை வழக்கம் போல் அவர்கள் வேலைக்கு வந்த போது,   கட்டிடத்திலிருந்து புகை வருவதைப் பார்த்த பணியாளர்கள் உடனடியாக நிறுவன அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்கள்.   அவர் வந்து  தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடம்  வந்த தீயணைப்பு வீரர்கள் தீ வேறு பகுதிக்கு பரவாமல் போராடி அணைத்தனர்.  

     பின்னர் கடைக்குள் சென்று பார்த்த போது கடையின் உட்பகுதியில் இருந்த ஏசியில் இருந்து மின் கசிவு மூலம் தீப்பிடித்தது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பிற்கான துணிகள் எரிந்து நாசமாக நிறுவனத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி