திருவட்டார் அருகே புத்தன்கடையில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் லெனின் (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து இடது கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்தார். உடனே டாக்டர் சுவராஜ் கிருஷ்ணன் (24) என்பவர் சிகிச்சை அளித்தார். காயத்தை சுத்தப்படுத்திய போது லெனின் திடீரென டாக்டர் கன்னத்தில் அறைந்து காலால் வயிற்றில் மிதுத்துள்ளார். தடுத்த நர்சையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். தாக்குதலில் டாக்டருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.