இரவில் நீரில் மூழ்கி காலையில் உயிரோடு வந்த அதிசயம்

70பார்த்தது
இரவில் நீரில் மூழ்கி காலையில் உயிரோடு வந்த அதிசயம்
குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் சபின் (21) கூலித் தொழிலாளி. இவர் நேற்று(செப்.17) அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் உட்பட 3 பேருடன் போதையில் அந்த பகுதியில் உள்ள ஆற்றின் கரை பகுதிக்கு சென்றனர்.

அப்போது சபின் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். நண்பர்கள் கரையில் இருந்து உள்ளனர். நீண்ட நேரம் குளித்துக் கொண்டிருந்த சபினை திடீரென காணவில்லை. இதைத்தொடர்ந்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பொதுமக்களுடன் தேடினர்.
 
அதற்குள் நள்ளிரவு ஆகிவிட்டதால் இன்று (18-ம் தேதி)  காலையில் தேடலாம் என அனைவரும் கலைந்து சென்றனர். இன்று காலை மீண்டும் தீயணைப்புத் துறை, கடையாலுமூடு போலீசாரும் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சபின் வீட்டுக்கு சென்றதாக தெரிய வந்தது.

போலீசார் வீட்டிற்கு சென்றபோது சபின் தூங்கிக் கொண்டிருப்பதாக பெற்றோர் கூறினார்கள். இதே கேட்டு அதிர்ந்த போலீசார் சபினை எழுப்பி நடந்த விவரத்தை விசாரித்த போது, இரவில் தண்ணீர் அடித்து சென்றதில் ஆற்றில் உள்ள ஒரு பாறையின் மேல் படுத்து தூங்கி விட்டதாகவும், போதை தெளிந்த உடனே மீண்டும் ஆற்றில் நீந்தி கரைக்கு வந்து, வீட்டுக்கு வந்ததாக கூறினார். இதை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் செய்வதறியாமல் திகைத்து அந்த வாலிபரை எச்சரித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி