தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (28). இவர் ஒரு வாரத்துக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். அவர் நேற்று (22-ம் தேதி) இரவு நண்பர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். விருந்து முடித்து ஜிஜின் என்பவரை காரில் வீட்டில் கொண்டு விடுவதற்காக மருதூர்க்குறிச்சி பகுதியில் சென்று, அங்கு நின்று பேசியுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் பிரைட் என்பவர் இங்கு சத்தம் போடக்கூடாது என்று கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அதே பகுதியை சேர்ந்த அஸ்ரா பிரைட் (35) ஆல்பர்ட் ராஜு (42) வில்பிரட் (65), பிரவீன் ராஜ் (35) இளங்கோ என்ற பங்கு (50) ஆகியோர் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் வந்து காரை அடித்து உடைத்து சேதப்படுத்தி, தடுத்த கணேசனின் தலையில் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கணேஷ் அளித்த புகார் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கணேஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் அஸ்வின் பிரைட் என்பவரை போலீசார் கைது செய்தனர்.