தக்கலை: நள்ளிரவில் வீட்டிலிருந்த 2 பள்ளி மாணவிகள் மாயம்

55பார்த்தது
தக்கலை: நள்ளிரவில் வீட்டிலிருந்த 2 பள்ளி மாணவிகள் மாயம்
தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக தனது இரண்டு மகள்களுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். நாகர்கோவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வரும் இந்த 36 வயது பெண் நேற்று முன்தினம் இரவு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய மகளும், ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயதுடைய மகளும் பெண்ணின் தாயாரும் இருந்துள்ளனர். மூன்று பேரும் இரவு சாப்பிட்டு விட்டு உறங்கியுள்ளனர். 

இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு பெண்ணின் தாயார் எழுந்து பார்த்தபோது 2 பேத்திகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் வீட்டின் வெளியே சென்று தேடியுள்ளார். மேலும் அக்கம் பக்கம் விசாரித்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தனது மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மகள் நேற்று தக்கலை போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து மாயமான மாணவிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி