திருவட்டாரை அடுத்த பாரத பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். காங்கிரஸ் நிர்வாகி. நேற்று இரவு வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த ஜாக்சனை முன் விரோதம் காரணமாக வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் உட்பட 6 - பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த வரை திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜாக்சனை கொலை செய்த நபர்களை கைது செய்யாமல் அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது குடும்பத்தினர் மட்றும் காங்கிரஸ் கட்சியினர் திருவட்டார் காவல் நிலையத்தை முத்திகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த எம் பி விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் காங்கிரஸ் கட்சியினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் டிஎஸ்பி உதய சூரியனிடம் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பி வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ஜாக்சன் வீட்டிற்குச் சென்ற எம் பி விஜய வசந்த் அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.