நித்திரவிளை: கோயிலில் உண்டியல் மாயம்

53பார்த்தது
நித்திரவிளை: கோயிலில் உண்டியல் மாயம்
நித்திரவிளை அருகே உண்டியல் ஆலங்கோடு பகுதியில் செண்பகத்துமூட்டில் பத்ரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வெளிப்பகுதியில் ஸ்டீல் குடத்தில் உண்டியல் ஒன்று காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடித்து கோயிலை பூட்டிவிட்டு நிர்வாகிகள் சென்றுள்ளனர். நேற்று காலை பக்தர்கள் கோயில் வந்து பார்த்தபோது உண்டியலை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் உண்டியலை தூக்கிச் சென்றுள்ளனர். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கோயில் திருவிழாவின்போது உண்டியல் திறந்து காணிக்கை எடுத்துள்ளனர். இந்த வருடம் அடுத்த மாதம் கோயில் திருவிழாவில் உண்டியல் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுசம்பந்தமாக கோயில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்து, வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி