தக்கலை அருகே முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட கூனிமாவிளை பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர் மக்கள் பயன்படுத்தி வரும் சாலை ஒன்று உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த சாலையில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் நான்கு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் பிரதிநிதிகள், மற்றும் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது பள்ளம் 5 அடிக்கு மேல் பெரிய பள்ளமாக மாறி உள்ளது. எந்த நேரம் வேண்டுமானாலும் உடைந்து விடும் நிலையில் காணப்படுகிறது.
வேன்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அந்த வழியாக போக முடியாமல் சிரமப்படுகின்றனர். அதை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.