கன்னியாகுமரி மாவட்டம் வழியாக காலை 6 மணியிலிருந்து 10 மணி வரையும் மாலை 3 மணியிலிருந்து 8 மணி வரைக்கும் கனிமவள கடத்தல் வாகனங்கள் செல்லக்கூடாது என்று அண்மையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை மீறி கனிமவளங்களை கடத்திச் செல்லும் அதிகனரக வாகனங்கள். சர்வ சாதாரணமாக சென்று கொண்டிருக்கின்றன. இதை தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, காவல்துறை போன்றவை கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.