குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சசி மனைவி கவிதா (40) இவர் அந்தப் பகுதியில் உள்ள முந்திரி ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகளுக்குத் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். மகன் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கவிதா மகளிர் சுய உதவிக் குழுவில் லோன் வாங்கி இருக்கிறார். சசி இதுதொடர்பாகக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற கவிதா பின்னர் இரவு வரை வீடு திரும்பவில்லை. கணவர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுசம்பந்தமாகக் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.