குலசேகரம் பகுதியில் இருந்து செல்லும் சிற்றார் பட்டணங்கால் மூலமாக குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் குலசேகரம், செருப்பாலூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் செப்டி டேங்க் நிறைந்து வழிந்தது.
அந்த கட்டிடத்தின் உரிமையாளர் சில பணியாளர்கள் மூலம் செப்டிக் டேங்க் கழிவை மின் மோட்டார் மூலம் கழிவு நீரை அப்படியே பைப் மூலம் சிற்றார் பட்டணங்கால்வாயில் நேரடியாக கலந்து விட்டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அடுக்குமாடி கட்டிட நிர்வாகத்தினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் குலசேகரம் பேரூராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். மேலும் கழிவு நீரை அகற்றிய மின்மோட்டார், குழாய்கள் மற்றும் பணியாளர்களின் பைக் போன்றவற்றை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து குடியிருப்பு நிர்வாகத்தினருக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.