குளச்சல்:  படகில்  மின்சாரம் பாய்ந்து மீனவர் பலி

76பார்த்தது
குளச்சல்:  படகில்  மின்சாரம் பாய்ந்து மீனவர் பலி
குளச்சல் துறைமுகத்தை தெருவை சேர்ந்தவர் மனுவேல் மகன் லிபிஸ்டன் (38). மீன்பிடி தொழிலாளி. கடந்த 20ம் தேதி இவர் வழக்கம் போல் தனது அண்ணன் சகாய லிபன் என்பவரின் விசைப்படகில் குளச்சல் மீன்பிடித் தொடக்கத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றார். மொத்தம் 16 பேர் சென்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்களது விசைப்படகு ஏர்வாடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது. அப்போது விசைப்படகில் மின்தடை ஏற்பட்டது. உடனே லிபிஸ்டன் விசைப்படகிலிருந்த ஜெனரேட்டர் இயக்கினார். அப்போது எதிர்பாராமல் லிபிஸ்டன் மீது மின்சாரம் பாய்ந்தது மயங்கி விசைப்படகில் சாய்ந்தார். சக மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லிபிஸ்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை ஊருக்கு கொண்டுவரப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது. உயிரிழந்த லிபிஸ்டனுக்கு சுஜானி (29) என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி