குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி டெய்சி (65). இவர் நோய்வாய்ப்பட்டதால் சம்பவ தினம் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காகப் பஸ்ஸில் குளச்சலுக்குச் சென்றார்.
பின்னர் மருந்துகளை வாங்கிவிட்டு பஸ்ஸில் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். தொடர்ந்து வீட்டிற்குச் செல்வதற்காக அங்குள்ள சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திங்கள் நகரிலிருந்து குளச்சல் நோக்கிப் பைக்கில் சென்ற 17 வயது சிறுவன் ஓட்டிய பைக் டெய்சி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த டெய்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டுச் சிகிச்சைக்காக அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து டெய்சி மகள் அஜிதா என்பவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.