களியக்காவிளை: ரேஷன் கடை சூறை; வாலிபர் கைது

71பார்த்தது
களியக்காவிளை: ரேஷன் கடை சூறை; வாலிபர் கைது
குறுமத்துர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடை சந்தவிளையில் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ரெகுராஜன் (55) விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரெகுராஜன் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அங்கு மடிச்சல் சந்தவிளை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (37) வந்து விற்பனையாளரை தகாத வார்த்தைகளால் பேசி தராசை அடித்து நொறுக்கி சூறையாடினார். இதுகுறித்து ரெகுராஜன் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி