ரயில்வே மேம்பாலம் பணி முடிக்க  முன்னாள் அமைச்சர் கோரிக்கை

52பார்த்தது
ரயில்வே மேம்பாலம் பணி முடிக்க  முன்னாள் அமைச்சர் கோரிக்கை
ஆரல்வாய்மொழி - குமாரபுரம் இணைப்புச் சாலையின் குறுக்கே செல்கின்ற சுபாஷ் நகர் ரயில்வே மேம்பாலம் கடந்த 2019-ல் இடிக்கப்பட்டது. இந்த பாலம் தொடர்ந்து  பல ஆண்டு காலமாக வேலை நடைபெறாமல் இருந்தது.   சூழ்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம் எல் எ  தலைமையில் பாலத்தை உடனடி சீரமைக்க கேட்டு ஆரல்வாய்மொழி சந்திப்பில் பொதுமக்கள் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
     இதையடுத்து தற்போது சுபாஷ் நகர் ரயில்வே மேம்பாலம் பணி  நடைபெற்று வருகிறது. அப்பணியினை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ நேரில் சென்று நேற்று  பார்வையிட்டார்.

உடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும்  தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பாலம் பணி கடந்த 5 ஆண்டுகளாக தாமதமாகி வருவதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளதால் உடனடி பணிகளை முடிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
Job Suitcase

Jobs near you