பைக் - லாரி மோதல் என்ஜினீயர் உயிரிழப்பு

72பார்த்தது
பைக் - லாரி மோதல் என்ஜினீயர் உயிரிழப்பு
வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் தம்பி மகன் தீபக் (26)சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் உறவினர் பெண் ஒருவருடன்  திருமணம் நடைபெற்றது.  

     நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் தனது பெற்றோர் வீட்டிலிருந்த மனைவியை பார்ப்பதற்காக வெள்ளமடத்தில் இருந்து பைக்கில் பார்வதிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒழுகினசேரி பாலம் பகுதியில் செல்லும் போது அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

      இதில் படுகாயம் அடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து பலனாய்வு  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபக் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

      போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துண்டாக்கிய லாரி தொடர்பாக  விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குடும்பத்தாருக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி