ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் எட்வின். இவர் நட்டலம் தேவசகாயம் ஆலயத்திற்குப் பேனர் வைப்பதற்காக நேற்று தனது காரில் மார்த்தாண்டத்திற்குப் புறப்பட்டார். தக்கலை அருகே மணலி பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டுச் சென்றது.
பின்னர் சாலை ஓரம் வளைவான பகுதிகளை அம்புக்குறியிட்டுக் காட்டும் சிக்னல் இரும்புப் போஸ்டர் மீது கார் மோதியது. இதில் அந்தக் கார் பலமுறை புல்லரிக்கப்பட்டு நின்றது. ஆனால் காரில் இருந்த ஏர்பேக் திறந்ததால் எட்வின் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இருப்பினும் அந்தக் கார் கடுமையாகச் சேதமடைந்தது. காயமடைந்த எட்வின் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.