கன்னியாகுமரி மாவட்டம்
பாஜக மாவட்ட இளைஞரணி தலைவராக இருப்பவர் வழக்கறிஞர் கண்ணன் இவர் குலசேகரன் பேரூராட்சி உறுப்பினராகவும் இருக்கிறார். அவரும் குலசேகரம் பேரூராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் சிவகுமாரும். மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகர நோக்கி வந்து கொண்டிருந்த போது புலியிறங்கிப் பகுதியில் வைத்து. அனி, ராஜேஷ், ராம்குமார் ஆகிய மூவரும் கண்ணனை வழிமறித்து தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற சிவகுமாரை தாக்கியதோடு சிவகுமார் வைத்திருந்த செல்போனையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் மீது தாக்குதல் நடத்தியது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.