புத்தன்சந்தை:   அரசு பள்ளி விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு

82பார்த்தது
அருமனை அருகே இடைக்கோடு பகுதி புத்தன்சந்தையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பள்ளி  திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொள்ள  அழைப்பு விடுத்திருந்தனர்.

       அழைப்பை ஏற்று இன்று காலை எஸ். பி ஸ்டாலின் அரசு தொடக்கப் பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது புத்தன்சந்தை சந்திப்பதிலிருந்து பள்ளிக்கூடம் வரை மாணவர்கள் எஸ் பி - யை  வரவேற்று ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். பின்னர் பள்ளியில் நடந்த விழாவில் எஸ்பி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

       அவர் பேசுகையில் நானும் ஒரு தமிழ் வழி அரசு பள்ளியில் படித்து வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவன் என்று கூறினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜான் கிறிஸ்டோபர், அருமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி