அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் 27 வது கிறிஸ்துமஸ் விழா இரண்டு நாட்கள் நடந்தது. நேற்று இரவு நெடிய சாலை சந்திப்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எம்எல்ஏ -க்கள் பிரின்ஸ், தாரகை கத்பட் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆசியுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு கேக் வெட்டி பேசினார். அவர் பேசுகையில், - அன்பு, மதசார்பற்ற பண்பு, மனிதகுலத்திற்கு சேவை செய்கின்ற பண்பு ஆகியவை கிறிஸ்து பிறப்பு உணர்த்தி தருகின்ற செய்தியாகும். காங்கிரஸ் கட்சியும் அந்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வரப்போகிறார். மதசார்பற்ற அவரது சிந்தனையின் கீழ் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை காண போகிறது. காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பாறை போன்ற பலமாக நீங்கள் ஆதரவாக இருக்கிறீர்கள். என பேசினார். இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ இயக்க நிர்வாகிகள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.