இரணியல் அருகே மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தற்கொலை

61பார்த்தது
இரணியல் அருகே மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தற்கொலை
இரணியல் அருகே உள்ள பேயன்குழியை சேர்ந்தவர் கோபி (73). விவசாயக் கூலி தொழிலாளி. இவரது மனைவி தங்கம். இந்த தம்பதிக்கு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.  

      கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். மனைவி இறப்புக்கு பிறகு கோபி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை மகளின் வீட்டில் சாப்பிட கோபி செல்லவில்லை. இதையடுத்து மகள் தந்தையின் வீட்டில் வந்து பார்த்தார்.

       அப்போது வீட்டில் கோபி தூக்கு போட்டு தொங்கிய நிலையில்  உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு வழியிலே கோபி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இரணியர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி