கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேச்சிப்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள மலையோர கிராமங்களில் பெருமளவில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை முறையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு வசதியாக ரூபாய் 5 கோடியே 40 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பழங்குடியினர் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த இருப்பதாக வன அலுவலர் இளையராஜா தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் படி சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து பேச்சுப்பாறை அணையில் படகு மூலம் அழைத்து. , அங்கிருந்து பழங்குடியினர் பகுதியில் வாகனங்களில் அழைத்து சென்று அவர்களின் வாழ்க்கை முறையை சுற்றுலா பயணிகளுக்கு விளக்குவதற்கு திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.