நாகர்கோவில் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.

76பார்த்தது
நாகர்கோவில் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை நாழிவிளை தெருவை சேர்ந்தவர் அனீஷ் (வயது 32), தண்ணீர் சுத்தம் செய்யும் எந்திரங்களை பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட அனீஷ் சம்ப வத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அனீசை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அனீஷ் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி