கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல மறவன்குடியிருப்பை சேர்ந்தவர் ஜார்ஜ் கதிரவன் (வயது45). இவர் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஜார்ஜ் கதிரவனுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால், ஜார்ஜ் கதிரவன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வண்ணான்விளை பகுதியில் உள்ள ஒரு தோப்பில் ஜார்ஜ் கதிரவன் விஷம் குடித்து
இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஜார்ஜ் கதிரவனின் மனைவிக்கு தெரிவித்தனர். பின்னர்,
இதுபற்றி ஜார்ஜ் கதிரவனின் மனைவி இருதயராணி சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சுசீந்திரம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜார்ஜ் கதிரவனின் உடலைகைப்பற்றி
பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.