நாகர்கோவிலில் இருந்து புதுக்கிராமம் வழியாக தேரூர் செல்லும் சாலையில் புது கிராமம் குளத்தின் கரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நீர்வள ஆதாரத்துறை மூலம் இந்த தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 15 நாட்களில் இந்த பணி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.