நாகர்கோவிலில் டீ கடையில் புகையிலை விற்ற பெண் கைது

1053பார்த்தது
நாகர்கோவிலில் டீ கடையில் புகையிலை விற்ற பெண் கைது
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள ஒரு டீ கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வடசேரி போலீசார் நேற்று (08.06.2024) அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடையில் இருந்த 25 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளரான இறச்சகுளத்தை சேர்ந்த நிஷா பாப்பா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி