நாகர்கோவில் பார்க்ரோடு பகுதியில் மரநாய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பெரிய மரநாய் தனது 5 குட்டிகளுடன் அப்பகுதியில் நடமாடி வருவதாக தெரிகிறது. இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதி விட்டுள்ளனர். மரநாய்களின் நடமாட்டால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வெளியே சென்று வருகிறார்கள். இதுபற்றிய தகவல் அறிந்த மாவட்ட வனத்துறை அதிகாரி பிரசாந்த் அந்த மரநாய்களை உடனடியாக பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பூதப்பாண்டி வனச்சரகர் ரவீந்திரன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் இன்று மரநாய்களை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.