வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் 10நாள் திருவிழா கொடியேற்றம்.

452பார்த்தது
வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் 10நாள் திருவிழா கொடியேற்றம்.
கன்னியாகுமரியை அடுத்த வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் ஆலய 10 நாள் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மாலை 5. 30 மணிக்கு திருக்கொடி பவனி, மாலை 6 மணிக்கு செபமாலை, மாலை 6. 30 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கொட்டாரம் பங்குத்தந்தை அருள்பணி. ஆன்றோ வினோத்குமார் தலைமை வகித்தார். மயிலாடி பங்குத்தந்தை அருள்பணி. சைமன் மறையுரையாற்றினார். விழா நாள்களில் செபமாலை, திருப்பலி, மறையுரை ஆகியவை நடைபெறும். 10ஆம் நாள் திருவிழாவான 28ஆம் தேதி காலை 6. 30 மணிக்கு செபமாலை, காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலி நடைபெறும். தேவசகாயம் மவுண்ட் முதன்மை அருள்பணியாளர் ஜெனிபர் எடிசன் தலைமை வகிக்கிறார். முப்பணிக் குழுக்கள் செயலர் அருள்பணி. மரிய வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு சப்பரப்பவனி நடைபெறும். மாலை 5. 30 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிர் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்குப்பேரவையினர், பங்கு அருள்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி