கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கீழ மணக்குடி தேவாலய பத்து நாள் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது. பங்குத்தந்தை தலைமையில் பிரார்த்தனையுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதனை ஒட்டி தினசரி திருப்பலிகளும் நடைபெறுகின்றன. கொடியேற்று விழா நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.